• May 17 2024

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது..!samugammedia

mathuri / Jan 17th 2024, 6:06 am
image

Advertisement

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள்நேற்றைய தினமும் (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மன்னார் மாவட்டம், பேசாலையை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக 18 மீனவர்களும் அவர்கள்  மீன்பிடிக்கப் பயன்படுத்திய இரண்டு ட்ரோலர் படகுகளும் கைது செய்யப்பட்டு  தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 மீனவர்களும்  மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  

இதேவேளை, அவர்கள் இன்றைய தினம் (17) மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது.samugammedia இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள்நேற்றைய தினமும் (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டம், பேசாலையை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக 18 மீனவர்களும் அவர்கள்  மீன்பிடிக்கப் பயன்படுத்திய இரண்டு ட்ரோலர் படகுகளும் கைது செய்யப்பட்டு  தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டன.அதன்பின்னர் 18 மீனவர்களும்  மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  இதேவேளை, அவர்கள் இன்றைய தினம் (17) மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement