• May 25 2026

அதிவேக நெடுஞ்சாலைக்கு 200 அதிசொகுசு பேருந்துகள்! - அமைச்சரவை அனுமதி!

Bus
shanu / Jun 25th 2025, 1:29 pm
image

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை  அனுமதி வழங்கியுள்ளது.


இலங்கை போக்குவரத்துச் சபையின் பொதுவான பேருந்துத் தொகுதியில் 52 சதவீதமானவையும்,  அதிசொகுசு பேருந்துத் தொகுதியில் 94 சதவீதமானவையும் பழுதடைந்துள்ளதுடன் அதன் ஆயுட்காலத்தையும் கடந்துள்ளது. 


இதனால் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துத் தொகுதிக்கு புதிய பேருந்துகளை  பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலையில் அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கான 200 அதிசொகுசு பேருந்துகளை தமது சொந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. 


இது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைக்கு 200 அதிசொகுசு பேருந்துகள் - அமைச்சரவை அனுமதி அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை  அனுமதி வழங்கியுள்ளது.இலங்கை போக்குவரத்துச் சபையின் பொதுவான பேருந்துத் தொகுதியில் 52 சதவீதமானவையும்,  அதிசொகுசு பேருந்துத் தொகுதியில் 94 சதவீதமானவையும் பழுதடைந்துள்ளதுடன் அதன் ஆயுட்காலத்தையும் கடந்துள்ளது. இதனால் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துத் தொகுதிக்கு புதிய பேருந்துகளை  பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கான 200 அதிசொகுசு பேருந்துகளை தமது சொந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement