மூதூர் பிரதேசத்திலிருந்து இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மூவினங்களையும் சேர்ந்த 200 மாணவ-மாணவிகளை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும், மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான யூசூப் லாபிர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள் பேண்ட் வாத்தியங்களோடு மூதூர் பிரதான வீதியூடாக பேரணியாக விழா மண்டத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்தோடு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்கள் மற்றும் பல்துறை சேவையாளர்கள் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
200 பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு மூதூர் பிரதேசத்திலிருந்து இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மூவினங்களையும் சேர்ந்த 200 மாணவ-மாணவிகளை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும், மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான யூசூப் லாபிர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது மாணவர்கள் பேண்ட் வாத்தியங்களோடு மூதூர் பிரதான வீதியூடாக பேரணியாக விழா மண்டத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்தோடு பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்கள் மற்றும் பல்துறை சேவையாளர்கள் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.