தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அவசர நிலக்கரி கொள்வனவு டெண்டர் மூலம் சுமார் 21,390 இலட்சம் (2,139 மில்லியன்) ரூபா பாரிய ஊழல் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (11) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 76 வருட வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மற்றும் திட்டமிடப்பட்ட கொள்ளையாக இந்த நிலக்கரி ஊழல் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
முறையான காலத்தில் விலை மனுக்களை கோராமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து, தகுதியற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்ததன் ஊடாகவும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலமும் ஏற்கனவே 100 பில்லியனுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான தரவுகளை இலங்கை மின்சார சபையும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது இந்த ஊழலின் அடுத்த கட்டம் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னைய டெண்டரின் படி 'ட்ரைடன்' (Trident) நிறுவனம் ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியை 98.20 டொலர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்ட போதிலும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் வர வேண்டிய கப்பல்களில் 07 கப்பல்கள் இலங்கைக்கு வரவில்லை.
இவ்வாறு திட்டமிட்டு ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கிய அரசாங்கம், தற்போது 'அவசர கொள்வனவு' என்ற பெயரில் மீண்டும் அதே நிறுவனத்திடமே நிலக்கரியைக் கோரியுள்ளது.
ஆனால், முன்னைய விலையை விட ஒரு தொன்னுக்கு 23 டொலர்கள் அதிகமாக, அதாவது 121.40 டொலர்களுக்கு இந்த நிலக்கரியைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பின் மூலம் மாத்திரம் சுமார் 2,139 மில்லியன் ரூபா மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் விவரித்தார்.
அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையானது உலக சந்தை விலை சூத்திரத்தின் படி அன்றி, இவ்வாறான நிலக்கரி ஊழல்களால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டவே மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், மின்சார சபையை மறுசீரமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஊழியர்களின் கொடுப்பனவுகளை வழங்க மறுப்பதோடு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட ஜனாதிபதி முன்வரவில்லை என அவர் சாடினார்.
இந்த நிலக்கரி ஊழலில் ஒரு கப்பலில் மிச்சப்படுத்தப்படும் பணத்தைக் கொண்டே மின்சார சபை ஊழியர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் உடனடியாக இந்த மோசடிகளை நிறுத்தி ஊழியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிலக்கரி ஊழல் மூலம் 2இ139 மில்லியன் ரூபா மோசடி: டி.வி. சானக்க குற்றச்சாட்டு தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அவசர நிலக்கரி கொள்வனவு டெண்டர் மூலம் சுமார் 21,390 இலட்சம் (2,139 மில்லியன்) ரூபா பாரிய ஊழல் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (11) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 76 வருட வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மற்றும் திட்டமிடப்பட்ட கொள்ளையாக இந்த நிலக்கரி ஊழல் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.முறையான காலத்தில் விலை மனுக்களை கோராமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து, தகுதியற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்ததன் ஊடாகவும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலமும் ஏற்கனவே 100 பில்லியனுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பான தரவுகளை இலங்கை மின்சார சபையும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது இந்த ஊழலின் அடுத்த கட்டம் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.முன்னைய டெண்டரின் படி 'ட்ரைடன்' (Trident) நிறுவனம் ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியை 98.20 டொலர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்ட போதிலும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் வர வேண்டிய கப்பல்களில் 07 கப்பல்கள் இலங்கைக்கு வரவில்லை. இவ்வாறு திட்டமிட்டு ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கிய அரசாங்கம், தற்போது 'அவசர கொள்வனவு' என்ற பெயரில் மீண்டும் அதே நிறுவனத்திடமே நிலக்கரியைக் கோரியுள்ளது. ஆனால், முன்னைய விலையை விட ஒரு தொன்னுக்கு 23 டொலர்கள் அதிகமாக, அதாவது 121.40 டொலர்களுக்கு இந்த நிலக்கரியைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பின் மூலம் மாத்திரம் சுமார் 2,139 மில்லியன் ரூபா மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் விவரித்தார்.அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையானது உலக சந்தை விலை சூத்திரத்தின் படி அன்றி, இவ்வாறான நிலக்கரி ஊழல்களால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டவே மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், மின்சார சபையை மறுசீரமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஊழியர்களின் கொடுப்பனவுகளை வழங்க மறுப்பதோடு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட ஜனாதிபதி முன்வரவில்லை என அவர் சாடினார். இந்த நிலக்கரி ஊழலில் ஒரு கப்பலில் மிச்சப்படுத்தப்படும் பணத்தைக் கொண்டே மின்சார சபை ஊழியர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் உடனடியாக இந்த மோசடிகளை நிறுத்தி ஊழியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.