• Nov 23 2024

26 வயது காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த 24 வயது காதலன்..!samugammedia

mathuri / Jan 7th 2024, 9:32 pm
image

தன் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலன் ஒருவர் தனது  காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இன்று (07) இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய இளைஞர், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 26 வயதான ஜே.எம். ஆயிஷா லக்மினி என்ற யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட யுவதி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் இருந்த நிலையில், சுமார் மூன்று மாதங்களாகத் தனது காதலனைத் தவிர்த்து வந்துள்ளார் என்று சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது என்று பிலியந்தலை பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

26 வயது காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த 24 வயது காதலன்.samugammedia தன் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலன் ஒருவர் தனது  காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.இந்தச் சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இன்று (07) இடம்பெற்றுள்ளது.இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய இளைஞர், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 26 வயதான ஜே.எம். ஆயிஷா லக்மினி என்ற யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொல்லப்பட்ட யுவதி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேகநபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் இருந்த நிலையில், சுமார் மூன்று மாதங்களாகத் தனது காதலனைத் தவிர்த்து வந்துள்ளார் என்று சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது என்று பிலியந்தலை பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement