• Sep 26 2026

கடலில் கவிழ்ந்த படகு தத்தளித்த 25 இந்தோனேசியர்கள் - இலங்கை கடற்படையின் அதிரடி மீட்பு

Chithra / Sep 25th 2026, 10:16 am
image


இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேசியப் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.


‘KM GARUDA JAYA VI’ என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகு, கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கவிழ்ந்துள்ளது.


இதன்போது படகில் இருந்த இந்தோனேசியப் பிரஜைகள் ஆபத்தில் சிக்கிய நிலையில், அவர்களில் 25 பேரை ‘MV MOONSTONE’ என்ற கப்பல் மீட்டுள்ளது.


மீட்கப்பட்டவர்களை கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த கப்பல், கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்துள்ளது.


இதனையடுத்து, கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், 25 பேரையும் அழைத்து வருவதற்காக இலங்கை கடற்படையினரால் இரண்டு கடற்படைக் படகுகள் அனுப்பப்பட்டன.


இதற்கமைய, ‘MV MOONSTONE’ கப்பலில் இருந்து 25 இந்தோனேசியப் பிரஜைகளும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு, கடற்படைக் கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.


கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடலில் கவிழ்ந்த படகு தத்தளித்த 25 இந்தோனேசியர்கள் - இலங்கை கடற்படையின் அதிரடி மீட்பு இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேசியப் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.‘KM GARUDA JAYA VI’ என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகு, கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கவிழ்ந்துள்ளது.இதன்போது படகில் இருந்த இந்தோனேசியப் பிரஜைகள் ஆபத்தில் சிக்கிய நிலையில், அவர்களில் 25 பேரை ‘MV MOONSTONE’ என்ற கப்பல் மீட்டுள்ளது.மீட்கப்பட்டவர்களை கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த கப்பல், கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்துள்ளது.இதனையடுத்து, கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், 25 பேரையும் அழைத்து வருவதற்காக இலங்கை கடற்படையினரால் இரண்டு கடற்படைக் படகுகள் அனுப்பப்பட்டன.இதற்கமைய, ‘MV MOONSTONE’ கப்பலில் இருந்து 25 இந்தோனேசியப் பிரஜைகளும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு, கடற்படைக் கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement