• Feb 13 2025

குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Chithra / Feb 12th 2025, 7:17 am
image

 

திருகோணமலை, கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வு பூர்வமான முறையில் நேற்று குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.

அத்துடன் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களிடம் மனு ஒன்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

1996.02.11ஆம் திகதி மாலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.


குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு  திருகோணமலை, கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் உணர்வு பூர்வமான முறையில் நேற்று குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.அத்துடன் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களிடம் மனு ஒன்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.1996.02.11ஆம் திகதி மாலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement