• Nov 07 2024

இரண்டாயிரத்தை நெருங்கும் தேர்தல் விதிமீறல்கள்- 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது!

Chithra / Nov 7th 2024, 2:57 pm
image


 

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 455 முறைப்பாடுகளும்,

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1483 முறைப்பாடுகளும், 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 144 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 19 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1603 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 3335 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொதுத் தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் தவிர, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 325 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இரண்டாயிரத்தை நெருங்கும் தேர்தல் விதிமீறல்கள்- 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது  பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரித்துள்ளது.தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 455 முறைப்பாடுகளும்,மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1483 முறைப்பாடுகளும், 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் 144 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 19 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1603 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 3335 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் பொதுத் தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 9 வேட்பாளர்கள் உள்ளிட்ட 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வேட்பாளர்கள் தவிர, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 325 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement