கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
ஹாரிஸ்பத்துவை – பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, நாளை (21) காலை 9 மணி முதல் எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மெதவெல (பழைய) நீர்த்தேக்கத்தின் கீழ் வரும் பிரதேசங்கள், மெதவெல (புதிய) நீர்த்தேக்கத்தின் கீழ் வரும் பிரதேசங்கள், கல்லெனவத்த, கலகெதர மற்றும் மாவத்தகம உள்ளிட்ட பகுதிகள் இந்த நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படவுள்ளன.
நீர் விநியோகத் தடை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வதுடன், அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
42 மணிநேரம் நீர் விநியோகம் தடை – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.ஹாரிஸ்பத்துவை – பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.அதன்படி, நாளை (21) காலை 9 மணி முதல் எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மெதவெல (பழைய) நீர்த்தேக்கத்தின் கீழ் வரும் பிரதேசங்கள், மெதவெல (புதிய) நீர்த்தேக்கத்தின் கீழ் வரும் பிரதேசங்கள், கல்லெனவத்த, கலகெதர மற்றும் மாவத்தகம உள்ளிட்ட பகுதிகள் இந்த நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படவுள்ளன.நீர் விநியோகத் தடை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.அத்துடன், குறித்த காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வதுடன், அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.