• Apr 01 2025

இளைஞர்களிடையே அதிகரித்துவரும் எச்.ஐ.வி தொற்று - 47 பேர் மரணம்

HIV
Chithra / Mar 30th 2025, 8:03 am
image

 

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 824 ஆகும்.

இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர்.

இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதனால், உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இளைஞர்களிடையே அதிகரித்துவரும் எச்.ஐ.வி தொற்று - 47 பேர் மரணம்  நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 824 ஆகும்.இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர்.இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதனால், உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement