• Oct 03 2024

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 வீரர்கள் உயிரிழப்பு..!!

Tamil nila / Jan 15th 2024, 9:10 pm
image

Advertisement

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கெச் மாவட்டத்தில் புலெடா பகுதியில் ராணுவ பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வீரர்கள் பயணம் செய்தனர்.

அப்போது, பயங்கரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி அதனை வெடிக்க செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான அந்த வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் திப்பு ரசாக், சவுகத், சபி உல்லா, தாரிக் அலி, முகமது தாரிக் கான் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்பு, வடக்கு வசீரிஸ்தானில் உளவு பிரிவு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 வீரர்கள் உயிரிழப்பு. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கெச் மாவட்டத்தில் புலெடா பகுதியில் ராணுவ பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வீரர்கள் பயணம் செய்தனர்.அப்போது, பயங்கரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி அதனை வெடிக்க செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான அந்த வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.ராணுவ வீரர்கள் திப்பு ரசாக், சவுகத், சபி உல்லா, தாரிக் அலி, முகமது தாரிக் கான் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்பு, வடக்கு வசீரிஸ்தானில் உளவு பிரிவு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement