• Jan 04 2025

போக்குவரத்து விதிகளை மீறிய 543 பேர் கைது

Chithra / Dec 29th 2024, 2:06 pm
image


கடந்த சில தினங்களில் கண்டி பிரதேசத்தில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 543 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியில் 14 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கண்டி சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்காவின் வழிகாட்டலில் பல்வேறு இடங்களிலும் இந்த சோதனைகள் இடம்பெற்றன. 

போதையில் வாகனம் செலுத்தல், அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் உட்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படவுள்ளதாக கண்டி தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், மது போதையில் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


போக்குவரத்து விதிகளை மீறிய 543 பேர் கைது கடந்த சில தினங்களில் கண்டி பிரதேசத்தில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 543 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டியில் 14 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.கண்டி சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்காவின் வழிகாட்டலில் பல்வேறு இடங்களிலும் இந்த சோதனைகள் இடம்பெற்றன. போதையில் வாகனம் செலுத்தல், அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் உட்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படவுள்ளதாக கண்டி தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இந்நிலையில், மது போதையில் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement