• Dec 14 2024

யாழ்.தென்மராட்சியில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்பு..!

Sharmi / Nov 28th 2024, 1:33 pm
image

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 12 இடைத்தங்கல் முகாம்களில், 268 குடும்பங்களைச் சேர்ந்த 1006 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யா/கொடிகாமம்  போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில், 47 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு தங்கியுள்ள கர்ப்பிணித் தாய்மார் மற்றும் வயோதிபர்களுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை தென்மராட்சி பிரதேசத்தின் அரச அலுவலகங்கள் மற்றும் வணக்க ஸ்தலங்களுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது.

அத்துடன், சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் ஆலயங்களுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழ்.தென்மராட்சியில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்பு. யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 1,816 குடும்பங்களைச் சேர்ந்த 5,749 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், 12 இடைத்தங்கல் முகாம்களில், 268 குடும்பங்களைச் சேர்ந்த 1006 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில், யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 186 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.யா/கொடிகாமம்  போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இடைத்தங்கல் முகாமில், 47 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தங்கியுள்ள கர்ப்பிணித் தாய்மார் மற்றும் வயோதிபர்களுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதேவேளை தென்மராட்சி பிரதேசத்தின் அரச அலுவலகங்கள் மற்றும் வணக்க ஸ்தலங்களுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது.அத்துடன், சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் ஆலயங்களுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement