• Sep 17 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 666 முறைப்பாடுகள் பதிவு..!

Sharmi / Aug 20th 2024, 10:44 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில், நேற்று (19) வரையான காலப்பகுதிக்குள் 35 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 3 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் நிலையத்துக்கும், மற்ற 32 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் நிலையங்களுக்கும் கிடைத்துள்ளன.

இதேவேளை, கடந்த ஜூலை 31 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 666 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமைக்கான 642 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 666 முறைப்பாடுகள் பதிவு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.அந்தவகையில், நேற்று (19) வரையான காலப்பகுதிக்குள் 35 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதில் 3 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் நிலையத்துக்கும், மற்ற 32 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் நிலையங்களுக்கும் கிடைத்துள்ளன.இதேவேளை, கடந்த ஜூலை 31 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 666 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமைக்கான 642 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement