• Nov 22 2024

இலங்கையை விட்டு வெளியேறியுள்ள 7 இலட்சம் பேர்...!

Chithra / Dec 15th 2023, 2:39 pm
image



வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு  இலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தகவலறியும் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குருநாகல் கிளை பணியகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களுக்கு இணங்க, இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இத்தகவல்களுக்கு இணங்க இலங்கையர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவும் தொழிலாளர்களாகவும் மின்சார கைத்தொழில் துறை வேலைவாய்ப்புக்காகவும் சாரதி உள்ளிட்ட ஏனைய தொழில்களுக்காகவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 பிரதேச அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன.

இந்த அலுவலகங்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டே சட்ட ரீதியாக மேற்படி 07 இலட்சத்து 32 ஆயிரம் பேரும் வெளிநாடு சென்றுள்ளனர். 

இலங்கையை விட்டு வெளியேறியுள்ள 7 இலட்சம் பேர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு  இலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.தகவலறியும் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குருநாகல் கிளை பணியகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களுக்கு இணங்க, இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இத்தகவல்களுக்கு இணங்க இலங்கையர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவும் தொழிலாளர்களாகவும் மின்சார கைத்தொழில் துறை வேலைவாய்ப்புக்காகவும் சாரதி உள்ளிட்ட ஏனைய தொழில்களுக்காகவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 பிரதேச அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன.இந்த அலுவலகங்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டே சட்ட ரீதியாக மேற்படி 07 இலட்சத்து 32 ஆயிரம் பேரும் வெளிநாடு சென்றுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement