பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும், சட்டத்தை மீறி ஒட்டப்பட்ட 9 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்,
4 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய 8 வேட்பாளர்கள் கைது - 9 இலட்சம் சுவரொட்டிகள் அழிப்பு பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.மேலும், சட்டத்தை மீறி ஒட்டப்பட்ட 9 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்,4 இலட்சம் தேர்தல் சுவரொட்டிகள் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.