• Aug 06 2026

செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம் – மொத்த எண்ணிக்கை 491 ஆக உயர்வு

Chithra / Aug 6th 2026, 9:50 am
image



யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 44ஆவது நாளான நேற்று (05), மேலும் 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம், செம்மணி மனித புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் கீழ் இதுவரை மொத்தமாக 491 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அவற்றில் 489 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம் – மொத்த எண்ணிக்கை 491 ஆக உயர்வு யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 44ஆவது நாளான நேற்று (05), மேலும் 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், செம்மணி மனித புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் கீழ் இதுவரை மொத்தமாக 491 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 489 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement