ரயில்வே லொகோமோட்டிவ் (LOCOMOTIVE) ஒப்பரேட்டிங் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 ரயில்கள் இன்று (07) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தகவலை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே லொகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள்,
ரயில் சாரதிகளின் பதவி உயர்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, ரயில் சாரதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியதன் காரணமாகவே பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணிப்புறக்கணிப்பில் குதித்த சாரதிகள் - இன்று 8 ரயில் சேவைகள் ரத்து ரயில்வே லொகோமோட்டிவ் (LOCOMOTIVE) ஒப்பரேட்டிங் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 ரயில்கள் இன்று (07) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.குறித்த தகவலை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில்வே லொகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள், ரயில் சாரதிகளின் பதவி உயர்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதன்படி, ரயில் சாரதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியதன் காரணமாகவே பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.