• Nov 25 2024

ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு உயிரிழந்த 8 வயது சிறுவன் - என்ன காரணம் ?

Tamil nila / Mar 19th 2024, 7:20 pm
image

அமெரிக்காவில் 8 வயது சிறுவன் ஒருவன் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டதை தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ் பள்ளியில் இரவு ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த 8 வயது சிறுவன் பல ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டுள்ளான் என சிறுவனின் பெற்றோர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

நிகழ்ச்சி நடந்த அடுத்த நாள் காலை அந்த சிறுவன் பேச்சு மூச்சற்று வீட்டில் கண்டறியப்பட்டுள்ளார். ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவனுக்கு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டுள்ளது என அந்த சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அறிகுறிகள் மோசமானதை தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

சிகிச்சை முடிந்து சிறுவன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளான். அடுத்த நாள் காலையில் பள்ளி செல்லுவதற்காக சிறுவனை பெற்றோர் எழுப்பிய போது அவன் பேச்சுமூச்சற்று இருந்துள்ளான்.

மேலும் இதை தொடர்ந்து அவன் உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவனின் மரணத்திற்கு பின் ஹாப்கின்ஸ் கவுண்டி மருத்துவத்துறை மேற்கொண்ட உடற்கூராய்வில் அந்த சிறுவன் அலர்ஜியால் உயிரிழந்தான் என தெரியவந்தது.





ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு உயிரிழந்த 8 வயது சிறுவன் - என்ன காரணம் அமெரிக்காவில் 8 வயது சிறுவன் ஒருவன் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டதை தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ் பள்ளியில் இரவு ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த 8 வயது சிறுவன் பல ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டுள்ளான் என சிறுவனின் பெற்றோர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி நடந்த அடுத்த நாள் காலை அந்த சிறுவன் பேச்சு மூச்சற்று வீட்டில் கண்டறியப்பட்டுள்ளார். ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவனுக்கு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டுள்ளது என அந்த சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.அறிகுறிகள் மோசமானதை தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிகிச்சை முடிந்து சிறுவன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளான். அடுத்த நாள் காலையில் பள்ளி செல்லுவதற்காக சிறுவனை பெற்றோர் எழுப்பிய போது அவன் பேச்சுமூச்சற்று இருந்துள்ளான்.மேலும் இதை தொடர்ந்து அவன் உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவனின் மரணத்திற்கு பின் ஹாப்கின்ஸ் கவுண்டி மருத்துவத்துறை மேற்கொண்ட உடற்கூராய்வில் அந்த சிறுவன் அலர்ஜியால் உயிரிழந்தான் என தெரியவந்தது.

Advertisement

Advertisement

Advertisement