• Feb 11 2025

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி; 89 இந்திய மீனவர்கள் கைது..!

Sharmi / Feb 11th 2025, 9:37 am
image

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார், நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற் பரப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

அத்துடன் தொடர்ச்சியாக விளக்கமறியலில் உள்ள மீனவர்களுக்கான வழக்கு விசாரணைகளை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி; 89 இந்திய மீனவர்கள் கைது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.மன்னார், நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற் பரப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.அத்துடன் தொடர்ச்சியாக விளக்கமறியலில் உள்ள மீனவர்களுக்கான வழக்கு விசாரணைகளை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement