பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில்
நேற்று (18) இரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது.
புலனாய்வுத்துறையின் , இரகசிய தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டபோது இந்த சண்டை நடைபற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய கமாண்டர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த சண்டை கைபர் மாவட்டத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் நடைபெற்றது.
இதில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதோடு, 6 பேர் காயம் அடைந்தனர்.
பாதுகாப்புப்படையினர் 8 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சண்டை பல மணி நேரம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் 9 பயங்கராவாதிகள் சுட்டுக்கொலை பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்று (18) இரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது.புலனாய்வுத்துறையின் , இரகசிய தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டபோது இந்த சண்டை நடைபற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய கமாண்டர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.இந்த சண்டை கைபர் மாவட்டத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதோடு, 6 பேர் காயம் அடைந்தனர்.பாதுகாப்புப்படையினர் 8 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சண்டை பல மணி நேரம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்துள்ளனர்.