• Oct 30 2024

மோதலில் முடிந்த 9 வருட காதல் - அனுராதபுரம் - கும்பிச்சாங்குளம் பகுதியில் பதற்றம்!

Tamil nila / Oct 30th 2024, 7:29 pm
image

Advertisement

அனுராதபுரம் - கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் இன்று பிற்பகல் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற் கொண்டவரும் குறித்த யுவதியும் காதலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவருகிறது.

இந்த யுவதி வேறு ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த சந்தேக நபர், தனது காதலியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே காதலனிடம் கத்தியும் விச போத்தலும் இருப்பதை அறிந்த இளம்பெண் காதலனிடமிருந்து தப்பிப்பதற்காக சுமார் 500 மீற்றர் தூரம் ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காதலன் சிறுமியை துரத்திச் சென்று தன்னிடமிருந்த கத்தியால் சிறுமியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைக் கண்ட மக்கள் ஒன்று திரண்டு வந்து அந்த யுவதியை காப்பாற்றி அந்த இளைஞனை வசப்படுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சுமார் 9 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோதலில் முடிந்த 9 வருட காதல் - அனுராதபுரம் - கும்பிச்சாங்குளம் பகுதியில் பதற்றம் அனுராதபுரம் - கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் இன்று பிற்பகல் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் மேற் கொண்டவரும் குறித்த யுவதியும் காதலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவருகிறது.இந்த யுவதி வேறு ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த சந்தேக நபர், தனது காதலியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இதனிடையே காதலனிடம் கத்தியும் விச போத்தலும் இருப்பதை அறிந்த இளம்பெண் காதலனிடமிருந்து தப்பிப்பதற்காக சுமார் 500 மீற்றர் தூரம் ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.காதலன் சிறுமியை துரத்திச் சென்று தன்னிடமிருந்த கத்தியால் சிறுமியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதனைக் கண்ட மக்கள் ஒன்று திரண்டு வந்து அந்த யுவதியை காப்பாற்றி அந்த இளைஞனை வசப்படுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.சுமார் 9 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement