• Dec 14 2024

வாகன விபத்தில் சிக்கி 12 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு...!சம்மாந்துறையில் சோகம்...!samugammedia

Sharmi / Feb 3rd 2024, 2:26 pm
image

சம்மாந்துறையில் இன்று (03)  இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்னால் உள்ள வீதியை கடந்து,  அருகிலுள்ள  தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து  அம்பாறையை நோக்கி   வந்த  கென்டர் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவனே பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய கென்டர் ரக வாகனத்தை  செலுத்தி வந்த  சாரதி  கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.




வாகன விபத்தில் சிக்கி 12 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.சம்மாந்துறையில் சோகம்.samugammedia சம்மாந்துறையில் இன்று (03)  இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்னால் உள்ள வீதியை கடந்து,  அருகிலுள்ள  தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து  அம்பாறையை நோக்கி   வந்த  கென்டர் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இவ் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவனே பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்துடன் தொடர்புடைய கென்டர் ரக வாகனத்தை  செலுத்தி வந்த  சாரதி  கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement