• Apr 17 2026

கோவிலில் சரிந்து விழுந்த 60 அடி பிரமாண்ட தேர் -சிதறி ஓடிய பக்தர்கள் 7 பேர் படுகாயம்!

Ziya / Feb 18th 2026, 9:21 am
image

https://www.facebook.com/share/v/18HVg5wk3H/


தமிழ்நாட்டு  வேலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் மயான கொள்ளை திருவிழாவின் போது 60 அடி உயர கோயில் தேர் கவிழ்ந்ததில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.


இந்த சம்பவம் பாலாறு ஆற்றங்கரையில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது நடந்துள்ளது.


குறித்த விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, அலங்கரிக்கப்பட்ட தேர் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த போது திடீரென சமநிலை இழந்து சாய்ந்து விழுந்துள்ளது.


விபத்தில் சிக்கிய பக்தர்களை  பொலிசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.


காயமடைந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொலிசார் மேலதீக விசாரணை நடத்தி வருகின்றனர். 


பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.


கோவிலில் சரிந்து விழுந்த 60 அடி பிரமாண்ட தேர் -சிதறி ஓடிய பக்தர்கள் 7 பேர் படுகாயம் https://www.facebook.com/share/v/18HVg5wk3H/தமிழ்நாட்டு  வேலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் மயான கொள்ளை திருவிழாவின் போது 60 அடி உயர கோயில் தேர் கவிழ்ந்ததில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் பாலாறு ஆற்றங்கரையில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது நடந்துள்ளது.குறித்த விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, அலங்கரிக்கப்பட்ட தேர் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த போது திடீரென சமநிலை இழந்து சாய்ந்து விழுந்துள்ளது.விபத்தில் சிக்கிய பக்தர்களை  பொலிசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.காயமடைந்தவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொலிசார் மேலதீக விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement