• Nov 07 2025

கிளிநொச்சியில் வெடித்துச் சிதறிய குண்டு; படுகாயமடைந்த இருவரில் ஒருவர் பலி

Chithra / Oct 12th 2025, 12:14 pm
image


கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

29.09.2025 அன்று  தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர்,  வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறிய சிதறிய சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதில் அங்கங்கள் சிதைந்து படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி  இப் பகுதியில் வெடிக்காத நிலையில் பல வெடி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கிளிநொச்சியில் வெடித்துச் சிதறிய குண்டு; படுகாயமடைந்த இருவரில் ஒருவர் பலி கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 29.09.2025 அன்று  தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர்,  வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறிய சிதறிய சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் அங்கங்கள் சிதைந்து படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்திருந்தனர்.இந்நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தை அடுத்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.அதன்படி  இப் பகுதியில் வெடிக்காத நிலையில் பல வெடி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement