• May 20 2025

Chithra / May 19th 2025, 11:52 am
image


புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பதுளை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதன்படி, பதுளை நீதிவான் நுஜித் டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

ஊழல் தொடர்பான மூன்று தனித்தனி வழக்குகள் தொடர்பாக கடந்த மார்ச் 27 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அவர் 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்து வந்தவை.

முன்னதாக, வழக்குகள் தொடர்பாக இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

அதே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


சாமர சம்பத் எம்.பிக்கு பிணை புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பதுளை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.அதன்படி, பதுளை நீதிவான் நுஜித் டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.ஊழல் தொடர்பான மூன்று தனித்தனி வழக்குகள் தொடர்பாக கடந்த மார்ச் 27 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க கைது செய்யப்பட்டார்.இந்தக் குற்றச்சாட்டுகள் அவர் 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்து வந்தவை.முன்னதாக, வழக்குகள் தொடர்பாக இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.அதே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement