• Jul 02 2026

லாரி மீது பேருந்து மோதி கொழுந்து விட்டு எரிந்த தீ!

Ziya / Jul 1st 2026, 5:31 pm
image

இந்தியாவின் மிக அதிநவீன விரைவுச்சாலையில் ஒரு கோரப் விபத்து நடைபெற்றுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் தௌசா (Dausa) மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


அதிகாலை வேளையில் பயணிகள் அனைவரும் ஆழமான தூக்கத்தில் இருந்த போது இந்த விபத்து நடந்ததால், பேருந்தின் அவசரக் கதவுகளைத் திறக்க முடியாமல் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து, தௌசா மாவட்ட எல்லைக்குள் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிபயங்கரமாக மோதியது.


மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததாகக் கூறப்படுகிறது.


தீ ஒட்டுமொத்தப் பேருந்துக்கும் நொடிப் பொழுதில் பரவியுள்ளது.


விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் அவசரக்கால மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்


"உயிரிழந்த 7 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோரில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது."  என தௌசா மாவட்ட எஸ்பி (SP) தெரிவித்துள்ளார்.


காயமடைந்தவர்கள் அனைவரும் தௌசா மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் (SMS) மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


விபத்து காரணமாக டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

லாரி மீது பேருந்து மோதி கொழுந்து விட்டு எரிந்த தீ இந்தியாவின் மிக அதிநவீன விரைவுச்சாலையில் ஒரு கோரப் விபத்து நடைபெற்றுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் தௌசா (Dausa) மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அதிகாலை வேளையில் பயணிகள் அனைவரும் ஆழமான தூக்கத்தில் இருந்த போது இந்த விபத்து நடந்ததால், பேருந்தின் அவசரக் கதவுகளைத் திறக்க முடியாமல் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து, தௌசா மாவட்ட எல்லைக்குள் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிபயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததாகக் கூறப்படுகிறது.தீ ஒட்டுமொத்தப் பேருந்துக்கும் நொடிப் பொழுதில் பரவியுள்ளது.விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் அவசரக்கால மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்"உயிரிழந்த 7 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோரில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது."  என தௌசா மாவட்ட எஸ்பி (SP) தெரிவித்துள்ளார்.காயமடைந்தவர்கள் அனைவரும் தௌசா மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் (SMS) மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

Advertisement

Advertisement

Advertisement