நெடுஞ்சாலையில் காரொன்று மின்னல் வேகத்தில் பயணித்து மற்றுமொரு காரை அடித்துத் தள்ளும் காட்சி பதறவைத்துள்ளது.
இந்தப் பயங்கர விபத்து பிரிட்டன் நெடுஞ்சாலையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. குறித்த சாலையில் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு கார் மின்னல் வேகத்தில் அதி வேகமாகப் பயணித்தது.
மின்னல் வேகத்தில் சென்ற கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வளைவில் பயணித்த மற்றைய காரை அடித்துத் தள்ளி விபத்திற்குள்ளானது.
விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆபத்தான முறையில் காரை செலுத்தியதற்காக குறித்த கார் சாரதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றில் முற்படுத்திய வேளையில் அதிவேகத்தில் காரை செலுத்தியமைக்காக 8 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதித்ததுடன் 17 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான சிசிரிவி காணொளியை 2 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி நெஞ்சைப் பதறவைக்கும் அளவில் பதிவாகியுள்ளது.
இது போன்று அதிவேகத்தில் பயணிப்பது பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டு அனைத்து சாரதிகளும் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக குறித்த காணொளியை வெளியிட்டுள்ளனர்.
மின்னல் வேகத்தில் பயணித்து அடித்துத் தள்ளிய கார் நெடுஞ்சாலையில் காரொன்று மின்னல் வேகத்தில் பயணித்து மற்றுமொரு காரை அடித்துத் தள்ளும் காட்சி பதறவைத்துள்ளது. இந்தப் பயங்கர விபத்து பிரிட்டன் நெடுஞ்சாலையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. குறித்த சாலையில் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு கார் மின்னல் வேகத்தில் அதி வேகமாகப் பயணித்தது. மின்னல் வேகத்தில் சென்ற கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வளைவில் பயணித்த மற்றைய காரை அடித்துத் தள்ளி விபத்திற்குள்ளானது. விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆபத்தான முறையில் காரை செலுத்தியதற்காக குறித்த கார் சாரதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றில் முற்படுத்திய வேளையில் அதிவேகத்தில் காரை செலுத்தியமைக்காக 8 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதித்ததுடன் 17 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்து தொடர்பான சிசிரிவி காணொளியை 2 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி நெஞ்சைப் பதறவைக்கும் அளவில் பதிவாகியுள்ளது. இது போன்று அதிவேகத்தில் பயணிப்பது பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டு அனைத்து சாரதிகளும் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக குறித்த காணொளியை வெளியிட்டுள்ளனர்.