பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செஸ்னா கரவன் C-208 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், நேற்று (01) பெருவின் பிரபல சுற்றுலாத் தலமான நாஸ்கா கோடுகள் (Nazca Lines) மீது பார்வைப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் பயணித்திருந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஜெர்மனியைச் சேர்ந்த 2 பேர், ஸ்பெயினைச் சேர்ந்த 2 பேர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால் விமானத்தில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை என்று பெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை சம்பவ இடத்திலிருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு பெருவில் அமைந்துள்ள நாஸ்கா கோடுகள், பாலைவன மணற்பரப்பில் வரையப்பட்ட பிரம்மாண்டமான பழங்கால உருவங்களால் உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும்.
இந்தப் பிரமாண்ட வடிவங்களை முழுமையாகக் காண சுற்றுலாப் பயணிகள் சிறிய விமானங்களில் வான்வழிச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெருவில் சுற்றுலா விமானம் திடீர் விபத்து - 13 பேர் உயிரிழப்பு பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.செஸ்னா கரவன் C-208 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், நேற்று (01) பெருவின் பிரபல சுற்றுலாத் தலமான நாஸ்கா கோடுகள் (Nazca Lines) மீது பார்வைப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.விமானத்தில் 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் பயணித்திருந்தனர்.உயிரிழந்தவர்களில் ஜெர்மனியைச் சேர்ந்த 2 பேர், ஸ்பெயினைச் சேர்ந்த 2 பேர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால் விமானத்தில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை என்று பெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதுவரை சம்பவ இடத்திலிருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.தெற்கு பெருவில் அமைந்துள்ள நாஸ்கா கோடுகள், பாலைவன மணற்பரப்பில் வரையப்பட்ட பிரம்மாண்டமான பழங்கால உருவங்களால் உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும்.இந்தப் பிரமாண்ட வடிவங்களை முழுமையாகக் காண சுற்றுலாப் பயணிகள் சிறிய விமானங்களில் வான்வழிச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.