• Nov 22 2024

யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்க விரும்பவில்லை; செங்கடலில் எமது பொறுப்பு நிறைவேற்றப்படும்! ஜனாதிபதி ரணில்

Chithra / Mar 1st 2024, 11:49 am
image

 

இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்க விரும்பவில்லை எனவும் செங்கடலில் எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக  சீனா துறைமுக ஸ்ரீலங்கா விமானப்படை வித்தியாலயத்தில் இடம்பெற்ற விமானப்படை கெடட்களின் சிதறல் அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

நாம் முன்னேற வேண்டுமானால், நாட்டில் ஒரு பெரிய நவீனமயமாக்கல் இருக்க வேண்டும், நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை நாம் பாதுகாக்க வேண்டும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது நம் நாட்டிற்கு ஆபத்து, நாம் அனைவரும் உலகில் தனித்தனியாக வாழமுடியாது

இலங்கை போன்ற நாடு போர் செய்து அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்கக் கூடாது. அப்படிச் செய்தால் நம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டோம் என்றே அர்த்தம்

இன்று செங்கடலில் நமது பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமானால், அவற்றைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எதிர்காலத்திலும் நாம் தயாராக இருக்க வேண்டும்.என்றார்.

யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்க விரும்பவில்லை; செங்கடலில் எமது பொறுப்பு நிறைவேற்றப்படும் ஜனாதிபதி ரணில்  இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்க விரும்பவில்லை எனவும் செங்கடலில் எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.வரலாற்றில் முதல் தடவையாக  சீனா துறைமுக ஸ்ரீலங்கா விமானப்படை வித்தியாலயத்தில் இடம்பெற்ற விமானப்படை கெடட்களின் சிதறல் அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,நாம் முன்னேற வேண்டுமானால், நாட்டில் ஒரு பெரிய நவீனமயமாக்கல் இருக்க வேண்டும், நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை நாம் பாதுகாக்க வேண்டும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது நம் நாட்டிற்கு ஆபத்து, நாம் அனைவரும் உலகில் தனித்தனியாக வாழமுடியாதுஇலங்கை போன்ற நாடு போர் செய்து அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்கக் கூடாது. அப்படிச் செய்தால் நம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டோம் என்றே அர்த்தம்இன்று செங்கடலில் நமது பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமானால், அவற்றைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எதிர்காலத்திலும் நாம் தயாராக இருக்க வேண்டும்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement