• Sep 20 2024

மருத்துவ திரவங்களை கண்காணிக்கும் கருவி- மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு! samugammedia

Tamil nila / Apr 28th 2023, 5:35 pm
image

Advertisement

சிகிச்சையின் போது நரம்பு வழியாக  உடலில் செலுத்தப்படும் மருந்துவ திரவங்களை கண்காணிக்கும் வகையிலான கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது பயோசிம்  என்றழைக்கப்படுவதுடன், இதனை  ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்களே கண்டுபிடித்துள்ளனர். 


பயோ மெடிக்கல் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்கள் தமது முயற்சியினால்  இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கருவி பாட்டிலில் உள்ள மருந்து தீரும் வேளையில் பீப் என்று ஒலி எழுப்பும் வகையிலும், பணியில் இருக்கும் செவிலியர்களின் செல்போனிற்கு  விழிப்பூட்டும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  பேராசிரியர் திவ்யலட்சுமி கூறுகையில், "எங்கள் கல்லூரியில் அமைந்துள்ள கூட்டு கண்டுபிடிப்பு மையம் மற்றும் இன்குபேஷன் நிறுவனமான டெக்ஸோ சொல்யூஷன்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த ஸ்மார்ட் பயோ சிம் என்ற புதிய கருவியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

மருத்துவ திரவங்களை கண்காணிக்கும் கருவி- மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு samugammedia சிகிச்சையின் போது நரம்பு வழியாக  உடலில் செலுத்தப்படும் மருந்துவ திரவங்களை கண்காணிக்கும் வகையிலான கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பயோசிம்  என்றழைக்கப்படுவதுடன், இதனை  ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்களே கண்டுபிடித்துள்ளனர். பயோ மெடிக்கல் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்கள் தமது முயற்சியினால்  இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.இந்த கருவி பாட்டிலில் உள்ள மருந்து தீரும் வேளையில் பீப் என்று ஒலி எழுப்பும் வகையிலும், பணியில் இருக்கும் செவிலியர்களின் செல்போனிற்கு  விழிப்பூட்டும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக  பேராசிரியர் திவ்யலட்சுமி கூறுகையில், "எங்கள் கல்லூரியில் அமைந்துள்ள கூட்டு கண்டுபிடிப்பு மையம் மற்றும் இன்குபேஷன் நிறுவனமான டெக்ஸோ சொல்யூஷன்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த ஸ்மார்ட் பயோ சிம் என்ற புதிய கருவியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement