• Nov 22 2025

அமெரிக்காவுடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை! தொடரும் பேச்சுவார்த்தைகள்!

Chithra / Nov 18th 2025, 10:39 am
image


அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாகக் கையெழுத்திடுவதற்கு இலங்கை இதுவரையில் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இதுவரையில் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக, நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார். 

குறித்த பேச்சுவார்த்தைகள் ஊடாக இலங்கைக்கான வரிகளை 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க முடிந்ததுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் 13 அன்று வெளியிட்ட உத்தரவில், இலங்கையால் ஏற்றுமதி செய்யப்பட்ட சில உணவுப் பொருட்களுக்கான வரிகளைப் பூஜ்ஜியமாகக் கொண்டு வந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை தொடரும் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாகக் கையெழுத்திடுவதற்கு இலங்கை இதுவரையில் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இதுவரையில் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக, நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் ஊடாக இலங்கைக்கான வரிகளை 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க முடிந்ததுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் 13 அன்று வெளியிட்ட உத்தரவில், இலங்கையால் ஏற்றுமதி செய்யப்பட்ட சில உணவுப் பொருட்களுக்கான வரிகளைப் பூஜ்ஜியமாகக் கொண்டு வந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement