• Nov 23 2024

ஐ.நாவின் முக்கிய அதிகாரிகள் குழு திருகோணமலைக்கு திடீர் விஜயம்...!samugammedia

Sharmi / Dec 15th 2023, 2:28 pm
image

திருகோணமலை  அகம் மனிதாபிமான  வள  நிலையத்திற்கு (AHRC) விஜயம் செய்த   ஐக்கிய  நாடுகள்  சபையின் இலங்கைக்கான  வதிவிடப்  பிரதி நிதி Mr. Marc-André Franche அவர்களும், OHCHR   பிரிவிற்கான சிரேஸ்ட மனித உரிமை அதிகாரிகள் அடங்களான 10 பேர்  கொண்ட குழுவினர் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்த வேளை குறித்த  நிறுவனத்திற்கும் சென்றிருந்தனர்.

இங்கு வருகை  தந்த ஐக்கிய நாட்டு  குழுவினரை  கிழக்கு மாகாண சிவில்  அமைப்பு பிரதிநிதிகளும்    AHRC  உத்தியோகத்தர்களும்  சந்தித்தனர்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகள்( நிலம் ஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கம், இராணுவ மயப்படுத்தல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், பெண்கள் தொடர்பான பிரச்சினைகள்) ஆதார பூர்வமாக வதிவிடப்  பிரதி நிதியிடம் எடுத்துரைக்கப்பட்டது  .  பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும்  பங்களிப்பு  வழங்க  வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஐ.நா. வதிவிடப்  பிரதிநிதி அவர்கள் கிழக்கு மாகாண மக்களின்  பிரச்சினை தொடர்பாக தாங்கள் அரச தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும்  கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஐ.நாவின் முக்கிய அதிகாரிகள் குழு திருகோணமலைக்கு திடீர் விஜயம்.samugammedia திருகோணமலை  அகம் மனிதாபிமான  வள  நிலையத்திற்கு (AHRC) விஜயம் செய்த   ஐக்கிய  நாடுகள்  சபையின் இலங்கைக்கான  வதிவிடப்  பிரதி நிதி Mr. Marc-André Franche அவர்களும், OHCHR   பிரிவிற்கான சிரேஸ்ட மனித உரிமை அதிகாரிகள் அடங்களான 10 பேர்  கொண்ட குழுவினர் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்த வேளை குறித்த  நிறுவனத்திற்கும் சென்றிருந்தனர்.இங்கு வருகை  தந்த ஐக்கிய நாட்டு  குழுவினரை  கிழக்கு மாகாண சிவில்  அமைப்பு பிரதிநிதிகளும்    AHRC  உத்தியோகத்தர்களும்  சந்தித்தனர்.இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகள்( நிலம் ஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கம், இராணுவ மயப்படுத்தல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், பெண்கள் தொடர்பான பிரச்சினைகள்) ஆதார பூர்வமாக வதிவிடப்  பிரதி நிதியிடம் எடுத்துரைக்கப்பட்டது  .  பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும்  பங்களிப்பு  வழங்க  வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஐ.நா. வதிவிடப்  பிரதிநிதி அவர்கள் கிழக்கு மாகாண மக்களின்  பிரச்சினை தொடர்பாக தாங்கள் அரச தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும்  கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement