• Nov 23 2024

நான்காயிரம் பேர் ஒன்று சேர்ந்து படைத்த கின்னஸ் சாதனை...!samugammedia

Anaath / Jan 2nd 2024, 1:07 pm
image

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில்  நான்காயிரம் பேர் ஒன்று சேர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர். 

குறித்த சாதனையானது புத்தாண்டையொட்டி மோதரா சூரியக் கோவிலில் நேற்று (01) காலை யில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர்  தெரிவிக்கையில், 

அதிகளவில் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க வந்துள்ளேன். இதுவரை இத்தகைய சாதனையை யாரும் செய்ததில்லை எனவும் மொதேராவில் நடைபெற்ற சூர்ய நமஸ்கார நிகழ்வைப் பொறுத்தவரை, சுமார் 4 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரத்தைச் செய்துள்ளதாகவும் 

மேலும் 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள், சூரிய நமஸ்காரம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் உள்துறை அமைச்சர் சங்வி கூறும்போது, நாட்டிலேயே இன்று முதல் உலக சாதனை படைத்துள்ளது என்று பெருமிதம் கூறியுள்ளதுடன் முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற யோகா தின நாளில் (ஜூன் 21) குஜராத் மாநிலம் கின்னஸ் சாதனை செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

குறித்த இதே வேளை இந்தியாவின் பிரதமர் மோடி இது பற்றி தெரிவிக்கையில், 

குஜராத் 2024 ஆம் ஆண்டை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையுடன் வரவேற்றுள்ளது.

108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த வகையில் மோதேரா சூரியன் கோயிலும் அடங்கும், அங்கு அனைவரும் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர்.

யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும்" என தெரிவித்துள்ளதுடன் 

சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதனால் வரும் நன்மைகள் அளப்பரியவை” எனவும்  தெரிவித்துள்ளார்.

நான்காயிரம் பேர் ஒன்று சேர்ந்து படைத்த கின்னஸ் சாதனை.samugammedia இந்தியாவின் குஜராத் மாநிலத்தில்  நான்காயிரம் பேர் ஒன்று சேர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர். குறித்த சாதனையானது புத்தாண்டையொட்டி மோதரா சூரியக் கோவிலில் நேற்று (01) காலை யில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர்  தெரிவிக்கையில், அதிகளவில் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க வந்துள்ளேன். இதுவரை இத்தகைய சாதனையை யாரும் செய்ததில்லை எனவும் மொதேராவில் நடைபெற்ற சூர்ய நமஸ்கார நிகழ்வைப் பொறுத்தவரை, சுமார் 4 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரத்தைச் செய்துள்ளதாகவும் மேலும் 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள், சூரிய நமஸ்காரம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் சங்வி கூறும்போது, நாட்டிலேயே இன்று முதல் உலக சாதனை படைத்துள்ளது என்று பெருமிதம் கூறியுள்ளதுடன் முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற யோகா தின நாளில் (ஜூன் 21) குஜராத் மாநிலம் கின்னஸ் சாதனை செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறித்த இதே வேளை இந்தியாவின் பிரதமர் மோடி இது பற்றி தெரிவிக்கையில், குஜராத் 2024 ஆம் ஆண்டை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையுடன் வரவேற்றுள்ளது.108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.அந்த வகையில் மோதேரா சூரியன் கோயிலும் அடங்கும், அங்கு அனைவரும் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர்.யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும்" என தெரிவித்துள்ளதுடன் சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதனால் வரும் நன்மைகள் அளப்பரியவை” எனவும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement