• Feb 17 2026

களுவாஞ்சிகுடியில் தொலைத் தொடர்பு கம்பத்தில் மோதிய பட்டா வாகனம்; தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

Chithra / Jan 4th 2026, 4:07 pm
image


கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு பக்கம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்திருந்த தொலைத் தொடர்பு கம்பத்தில் மோதிய பின்னர் ஆலயத்தின் மதிலிலும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 


இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பவித்ததாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.


விபத்தில் சாரதி சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்துக்குள்ளான வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


களுவாஞ்சிகுடியில் தொலைத் தொடர்பு கம்பத்தில் மோதிய பட்டா வாகனம்; தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு பக்கம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்திருந்த தொலைத் தொடர்பு கம்பத்தில் மோதிய பின்னர் ஆலயத்தின் மதிலிலும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பவித்ததாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.விபத்தில் சாரதி சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்துக்குள்ளான வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement