• May 23 2026

வானில் இன்றிரவு நிகழவுள்ள மாபெரும் மாற்றம்

Aathira / Nov 3rd 2025, 5:49 pm
image

'சுப்பர் மூன்' (Supermoon) எனப்படும் நிகழ்வு இன்றிரவு வானில் தென்படவுள்ளதாக ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இது வழக்கமான முழு நிலவை விட சுமார் 14% பெரியதாகவும், சுமார் 30% அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்திரனின் நீள்வட்டப் பாதையைப் பொருத்தவரை பூமிக்கு மிக அருகிலுள்ள நிலையில் சந்திரன் இன்று சுமார் 356,980 கி.மீ தொலைவில் இருக்கும். 

இதனால் இந்நாள் இந்த வருடத்தின் மிகப் பெரிய சுப்பர் மூன் நிகழ்வு ஆகும்.

இந்த சுப்பர் மூன் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அலைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வானில் இன்றிரவு நிகழவுள்ள மாபெரும் மாற்றம் 'சுப்பர் மூன்' (Supermoon) எனப்படும் நிகழ்வு இன்றிரவு வானில் தென்படவுள்ளதாக ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், இது வழக்கமான முழு நிலவை விட சுமார் 14% பெரியதாகவும், சுமார் 30% அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.சந்திரனின் நீள்வட்டப் பாதையைப் பொருத்தவரை பூமிக்கு மிக அருகிலுள்ள நிலையில் சந்திரன் இன்று சுமார் 356,980 கி.மீ தொலைவில் இருக்கும். இதனால் இந்நாள் இந்த வருடத்தின் மிகப் பெரிய சுப்பர் மூன் நிகழ்வு ஆகும்.இந்த சுப்பர் மூன் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அலைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement