வெனிசுலாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான கார்டன் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஃபால்கான் மாகாணத்தின் புன்டோ ஃபிஜோ பகுதியில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தில், ஒரு பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்டன் சுத்திகரிப்பு நிலையம் இயல்பான முழுத் திறனில் செயல்படும் போது, நாளொன்றுக்கு சுமார் 3.1 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெனிசுலாவின் முக்கிய பெட்ரோலிய உள்கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
தற்போதைய தகவலின்படி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. எனினும், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் முழுமையாக எப்போது செயல்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான விரிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. வெனிசுலா அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான PDVSA உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
உலகளவில் எண்ணெய் விநியோகச் சங்கிலி ஏற்கனவே பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், முக்கிய சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக நிறுத்தம் எண்ணெய் மற்றும் எரிபொருள் சந்தையில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பற்றி எரிந்த வெனிசுலாவின் முக்கிய எண்ணெய் நிலையம் வெனிசுலாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான கார்டன் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.ஃபால்கான் மாகாணத்தின் புன்டோ ஃபிஜோ பகுதியில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தில், ஒரு பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கார்டன் சுத்திகரிப்பு நிலையம் இயல்பான முழுத் திறனில் செயல்படும் போது, நாளொன்றுக்கு சுமார் 3.1 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெனிசுலாவின் முக்கிய பெட்ரோலிய உள்கட்டமைப்புகளில் ஒன்றாகும்.தற்போதைய தகவலின்படி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. எனினும், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் முழுமையாக எப்போது செயல்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான விரிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. வெனிசுலா அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான PDVSA உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.உலகளவில் எண்ணெய் விநியோகச் சங்கிலி ஏற்கனவே பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், முக்கிய சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக நிறுத்தம் எண்ணெய் மற்றும் எரிபொருள் சந்தையில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.