பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும் அவரது மகளும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பான்டின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர்கள், நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இதன்போதே இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க தாயும், அவரது 20 வயது மகளும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே மரணத்திற்கான அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவரும்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏதேனும் கடிதங்கள் அல்லது முக்கிய ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டதா என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
இவர்களின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரான்ஸில் ஈழத்தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும் அவரது மகளும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.பான்டின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர்கள், நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதன்போதே இருவரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.உயிரிழந்தவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க தாயும், அவரது 20 வயது மகளும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே மரணத்திற்கான அதிகாரப்பூர்வமான காரணம் தெரியவரும்.அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏதேனும் கடிதங்கள் அல்லது முக்கிய ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டதா என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.இவர்களின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.