அரசியல் நெருக்கடியால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது
பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் நேற்று (04) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினர்.
இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியதுடன், பிரான்ஸ் பிரதமர் மைக்கல் பார்னியரையும் (Michel Barnier) பதவியிலிருந்து வெளியேற்ற கட்டாயப்படுத்தியது.
பிரதமர் மைக்கேல் பார்னியர் மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 331 தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி சட்டமியற்றுபவர்கள் ஆதரவாக வாக்குகளை அளித்தனர்.
பார்னியர் சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தனது வரவு செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பின்றி கட்டாயப்படுத்தியதை அடுத்து எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை முன்வைத்தன.
1962 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரான்சின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த வளர்ச்சியானது பிரான்சின் அரசியல் உறுதியற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும், கோடையில் நடந்த திடீர் தேர்தல்களுக்குப் பின்னர் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு குழுவிற்கும் பெரும்பான்மை இல்லை.
பார்னியர் இப்போது தனது அரசாங்கத்தின் இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், அவரால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமும் தற்சமயம் செலிழந்து விட்டது.
முன்னாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளராக இருந்த பார்னியர், தனது இராஜினாமா மற்றும் அவரது அரசாங்கத்தின் இராஜினாமாவை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
73 வயதான அவர் செப்டம்பரில் பிரதமராக நியமிக்கப்பட்டார் மற்றும் பிரான்சின் நவீன குடியரசில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதமர் ஆகியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி : பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்ந்தது அரசியல் நெருக்கடியால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளதுபிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் நேற்று (04) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினர்.இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியதுடன், பிரான்ஸ் பிரதமர் மைக்கல் பார்னியரையும் (Michel Barnier) பதவியிலிருந்து வெளியேற்ற கட்டாயப்படுத்தியது.பிரதமர் மைக்கேல் பார்னியர் மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 331 தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி சட்டமியற்றுபவர்கள் ஆதரவாக வாக்குகளை அளித்தனர்.பார்னியர் சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி தனது வரவு செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பின்றி கட்டாயப்படுத்தியதை அடுத்து எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை முன்வைத்தன.1962 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரான்சின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும்.இந்த வளர்ச்சியானது பிரான்சின் அரசியல் உறுதியற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும், கோடையில் நடந்த திடீர் தேர்தல்களுக்குப் பின்னர் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு குழுவிற்கும் பெரும்பான்மை இல்லை.பார்னியர் இப்போது தனது அரசாங்கத்தின் இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், அவரால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமும் தற்சமயம் செலிழந்து விட்டது.முன்னாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளராக இருந்த பார்னியர், தனது இராஜினாமா மற்றும் அவரது அரசாங்கத்தின் இராஜினாமாவை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.73 வயதான அவர் செப்டம்பரில் பிரதமராக நியமிக்கப்பட்டார் மற்றும் பிரான்சின் நவீன குடியரசில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதமர் ஆகியுள்ளார்.