கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக சுமார் 8,400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் 6,077 மில்லியன் ரூபாய் மூலதனச் செலவாகவும் 2,323 மில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் விலை உயர்வு கடற்றொழிலாளர்களின் தொழிலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரதான விடயமாக உள்ளது.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது இலங்கையிலும் அதன் விலை அதிகரிக்கப்படுவதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்ட மூலம் அமைச்சர் டக்ளஸ் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.குறித்த நடவடிக்கைக்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக சுமார் 8,400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் 6,077 மில்லியன் ரூபாய் மூலதனச் செலவாகவும் 2,323 மில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன் எரிபொருள் விலை உயர்வு கடற்றொழிலாளர்களின் தொழிலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரதான விடயமாக உள்ளது.பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது இலங்கையிலும் அதன் விலை அதிகரிக்கப்படுவதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.