• Nov 22 2026

முன்பள்ளிக் கல்வியில் புதிய அத்தியாயம் – 2027 முதல் என்ன மாற்றம்?

Chithra / Nov 22nd 2026, 3:17 pm
image


2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே பொதுவான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.


நாட்டில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கமைய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் இணைந்து முன்பள்ளிகளுக்கான பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சி நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன், மக்கள் எதிர்பார்த்த சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கான ஆரம்ப அணுகுமுறையையும் வழங்கியுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கியதாகவும், தற்போது அந்த இலக்கை ஓரளவுக்கு அடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஆண்டில் நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரச சேவையை வினைத்திறனாக்குதல், கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.

முன்பள்ளிக் கல்வியில் புதிய அத்தியாயம் – 2027 முதல் என்ன மாற்றம் 2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே பொதுவான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.நாட்டில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் இணைந்து முன்பள்ளிகளுக்கான பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சி நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன், மக்கள் எதிர்பார்த்த சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கான ஆரம்ப அணுகுமுறையையும் வழங்கியுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கியதாகவும், தற்போது அந்த இலக்கை ஓரளவுக்கு அடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஆண்டில் நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரச சேவையை வினைத்திறனாக்குதல், கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement