நாட்டில் நிலவும் தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்காலத்தில் புதிய டிஜிட்டல் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்தார்.
இதன் போது தொழில் வழங்குனர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தொழிற்சாலைகள் கிராமங்களில் இருக்கமானால், தொழில்துறை அமைச்சு மக்களுக்கு சேவைகளை வழங்கும் இடமாக இருந்தால், அந்த சேவைகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் வழங்கப்பட வேண்டும்.
பின்னர் தொழில் வழங்குனர்கள் கொழும்புக்கு வந்து அதற்காகப் போராட வேண்டியதில்லை. எங்கள் எதிர்கால திட்டம் நவீனமயமாக்கப்பட்டு தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவுடன், தொழிற்சாலையிலேயே பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
ஒருவர் தொழில் தொடங்க அனுமதி பெற ஒன்றரை வருடம் மட்டுமே ஆகும். இல்லையெனில், இலஞ்சம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகின்றது. இலஞ்சம் வழங்காமல் இருப்பதற்காகவே அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே இலஞ்சம் வழங்காமல் ஊழலற்ற முறையில் செயற்பட வேண்டியது அவசியம். இதை மேலும் மேம்படுத்த, அனைத்து அரச கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் வேலையை எளிதாக்குவதற்காக தொழில்முனைவோரிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, வேலையை இலகுபடுத்த இலஞ்சம் கொடுக்க வேண்டாம்” இவ்வாறு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொழில்துறைப் பிரச்சினையைத் தீர்க்க புதிய திட்டம் நாட்டில் நிலவும் தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்காலத்தில் புதிய டிஜிட்டல் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்தார்.இதன் போது தொழில் வழங்குனர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தொழிற்சாலைகள் கிராமங்களில் இருக்கமானால், தொழில்துறை அமைச்சு மக்களுக்கு சேவைகளை வழங்கும் இடமாக இருந்தால், அந்த சேவைகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் வழங்கப்பட வேண்டும்.பின்னர் தொழில் வழங்குனர்கள் கொழும்புக்கு வந்து அதற்காகப் போராட வேண்டியதில்லை. எங்கள் எதிர்கால திட்டம் நவீனமயமாக்கப்பட்டு தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவுடன், தொழிற்சாலையிலேயே பிரச்சினைகளை தீர்க்க முடியும்.ஒருவர் தொழில் தொடங்க அனுமதி பெற ஒன்றரை வருடம் மட்டுமே ஆகும். இல்லையெனில், இலஞ்சம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகின்றது. இலஞ்சம் வழங்காமல் இருப்பதற்காகவே அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இலஞ்சம் வழங்காமல் ஊழலற்ற முறையில் செயற்பட வேண்டியது அவசியம். இதை மேலும் மேம்படுத்த, அனைத்து அரச கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் வேலையை எளிதாக்குவதற்காக தொழில்முனைவோரிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, வேலையை இலகுபடுத்த இலஞ்சம் கொடுக்க வேண்டாம்” இவ்வாறு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.