• Aug 27 2025

வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை; பலியான சோகம் - நொருங்கிய குடும்பம்!

shanuja / Aug 26th 2025, 9:59 am
image

வண்டைப் பிடித்து விழுங்கிய ஒரு வயதேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அருகே  இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருகையில், 


குறித்த குழந்தை வீட்டில்  தரையில் விளையாடிக் கொண்டிருந்தது. அதன்போது தரையில் ஊர்ந்து சென்ற வண்டை அவதானித்து அதனை எடுத்து விழுங்கியுள்ளது.  


வண்டை விழுங்கிய பின்னர் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 


எனினும் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்  குழந்தை ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 


குழந்தையின் மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தை மட்டுமன்றி அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வண்டை விழுங்கிய ஒரு வயது குழந்தை; பலியான சோகம் - நொருங்கிய குடும்பம் வண்டைப் பிடித்து விழுங்கிய ஒரு வயதேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அருகே  இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருகையில், குறித்த குழந்தை வீட்டில்  தரையில் விளையாடிக் கொண்டிருந்தது. அதன்போது தரையில் ஊர்ந்து சென்ற வண்டை அவதானித்து அதனை எடுத்து விழுங்கியுள்ளது.  வண்டை விழுங்கிய பின்னர் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்  குழந்தை ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். குழந்தையின் மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தை மட்டுமன்றி அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement