• Oct 02 2026

சாத்வீகப் போராட்டம் ஜனநாயக ஆட்சியினரால் மதிக்கப்பட வேண்டும் – சிறிநேசன்

Aathira / Oct 1st 2026, 7:33 am
image

ஜனநாயக நாடுகளில் சாத்வீகப் போராட்டங்களை ஆட்சியாளர்கள் மதிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (30 ) ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சாத்வீகப் போராட்டங்கள் சமூக நலனுக்காக தம்மைத் தாமே ஒறுத்துக்கொண்டு போராடும் வழிமுறையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள சிறிநேசன், இவ்வாறான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மதிக்கும் போது மக்கள் ஜனநாயகத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்ததை அவர் தனது அறிக்கையில் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து உயிரிழந்ததாகவும், அவரது நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபனின் 39ஆவது நினைவேந்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமை, சாத்வீகப் போராட்டத்திற்கு எதிரான போக்கை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் தமிழ் மக்களிடையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், சாத்வீகப் போராட்டம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மூலமே அதற்கான பதில் கிடைக்கும் எனவும் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிஸ் தரப்பு, கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

திலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சாத்வீகப் போராட்டம் ஜனநாயக ஆட்சியினரால் மதிக்கப்பட வேண்டும் – சிறிநேசன் ஜனநாயக நாடுகளில் சாத்வீகப் போராட்டங்களை ஆட்சியாளர்கள் மதிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.அவர் நேற்று (30 ) ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.சாத்வீகப் போராட்டங்கள் சமூக நலனுக்காக தம்மைத் தாமே ஒறுத்துக்கொண்டு போராடும் வழிமுறையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள சிறிநேசன், இவ்வாறான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மதிக்கும் போது மக்கள் ஜனநாயகத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்ததை அவர் தனது அறிக்கையில் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து உயிரிழந்ததாகவும், அவரது நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபனின் 39ஆவது நினைவேந்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமை, சாத்வீகப் போராட்டத்திற்கு எதிரான போக்கை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.இந்த நடவடிக்கையால் தமிழ் மக்களிடையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.மேலும், சாத்வீகப் போராட்டம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மூலமே அதற்கான பதில் கிடைக்கும் எனவும் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.இதனிடையே, திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிஸ் தரப்பு, கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.திலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement