அம்பலப்பெருமாள் குளப் பகுதியில், மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் தடையை நீக்கும் நோக்கில், 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பெட்டிவடிகால் மற்றும் அணுகுவீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த குளத்தின் வான் மேவி நீர் பாய்வதால், ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இப்பகுதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, குளத்தின் வான் மேவி சுமார் இரண்டு அடி உயரத்துக்கு நீர் பாய்வதால், அப்பகுதி மக்கள் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடந்த 2025ஆம் ஆண்டு டிசெம்பர் 17ஆம் திகதி, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களப் பணிப்பாளர்களுடன் அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அம்பலப்பெருமாள் குளப் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைய, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ், 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பல அறைகளைக் கொண்ட பெட்டிவடிகால் மற்றும் அணுகுவீதி அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த புனரமைப்புப் பணிகளை நேற்று, பார்வையிட்ட ஆளுநர் , பணிகளை முன்னெடுத்து வரும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினரைப் பாராட்டியதுடன், பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
அம்பலப்பெருமாள் குளப் பகுதியில் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அம்பலப்பெருமாள் குளப் பகுதியில், மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் தடையை நீக்கும் நோக்கில், 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பெட்டிவடிகால் மற்றும் அணுகுவீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த குளத்தின் வான் மேவி நீர் பாய்வதால், ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இப்பகுதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.குறிப்பாக, குளத்தின் வான் மேவி சுமார் இரண்டு அடி உயரத்துக்கு நீர் பாய்வதால், அப்பகுதி மக்கள் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடந்த 2025ஆம் ஆண்டு டிசெம்பர் 17ஆம் திகதி, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களப் பணிப்பாளர்களுடன் அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டிருந்தார்.இதன்போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அம்பலப்பெருமாள் குளப் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.இதற்கமைய, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ், 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பல அறைகளைக் கொண்ட பெட்டிவடிகால் மற்றும் அணுகுவீதி அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், குறித்த புனரமைப்புப் பணிகளை நேற்று, பார்வையிட்ட ஆளுநர் , பணிகளை முன்னெடுத்து வரும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினரைப் பாராட்டியதுடன், பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.