இன்ஸ்டகிராமில் ஐ லவ் யூ பதிவிட்ட சிறுவனை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் அறிமுகமானார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் "ஐ லவ் யூ" என்று ஒரு செய்தியை அனுப்பினாள். அதற்கு அந்த சிறுவன் "ஐ லவ் யூ டூ" என்று பதிலளித்தான்.
இதனையடுத்து மறுநாள், அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார்.
இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் "ஐ லவ் யூ" என்று சொல்வீர்களா? இதை அறிந்ததும் அவரது கணவர் எனக்கு தொலைபேசி அழைப்பு செய்துள்ளார்.
அவர்கள் அனைவரும் மைலாவரம் பொலிஸ் நிலையத்தில் உள்ளனர். உடனே அங்கு வர வேண்டும் என மிரட்டினார்.
பொலிஸ் என்றதும் பயந்துபோன சிறுவன் அழுது கொண்டு, நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன் என்று கூறினான். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, குறித்த நபர் ஒன்லைன் மூலம் 11,000 ரூபாவை ஏமாற்றி வாங்கியுள்ளார்.
இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர்.
எனவே இளைஞர்கள் இதில் சிக்காமல் இருக்க கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் குற்ற அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்ஸ்டாவில் ஐ லவ் யூ பதிவு; சிறுவனை ஏமாற்றி பணம் பறித்த நபர் இன்ஸ்டகிராமில் ஐ லவ் யூ பதிவிட்ட சிறுவனை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் அறிமுகமானார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர்.சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் "ஐ லவ் யூ" என்று ஒரு செய்தியை அனுப்பினாள். அதற்கு அந்த சிறுவன் "ஐ லவ் யூ டூ" என்று பதிலளித்தான். இதனையடுத்து மறுநாள், அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார்.இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் "ஐ லவ் யூ" என்று சொல்வீர்களா இதை அறிந்ததும் அவரது கணவர் எனக்கு தொலைபேசி அழைப்பு செய்துள்ளார். அவர்கள் அனைவரும் மைலாவரம் பொலிஸ் நிலையத்தில் உள்ளனர். உடனே அங்கு வர வேண்டும் என மிரட்டினார். பொலிஸ் என்றதும் பயந்துபோன சிறுவன் அழுது கொண்டு, நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன் என்று கூறினான். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, குறித்த நபர் ஒன்லைன் மூலம் 11,000 ரூபாவை ஏமாற்றி வாங்கியுள்ளார். இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் இதில் சிக்காமல் இருக்க கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் குற்ற அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.