• Mar 28 2026

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றவர் திடீர் மரணம்

Chithra / Mar 27th 2026, 3:14 pm
image

சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 


இச்சம்பவம் இன்று  காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


இவர் தனது உறவினர்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, மல்வத்தை - நல்லதண்ணி பாதையிலுள்ள கங்குலதென்ன பகுதியில் வைத்து திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.


உடனடியாகச் செயற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இணைந்து, அவரை நல்லதண்ணி நகருக்குத் தூக்கி வந்துள்ளனர். 


அங்கிருந்து நோயாளி காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.


எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


உயிரிழந்தவரின் உடல் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றவர் திடீர் மரணம் சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று  காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, மல்வத்தை - நல்லதண்ணி பாதையிலுள்ள கங்குலதென்ன பகுதியில் வைத்து திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.உடனடியாகச் செயற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இணைந்து, அவரை நல்லதண்ணி நகருக்குத் தூக்கி வந்துள்ளனர். அங்கிருந்து நோயாளி காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.உயிரிழந்தவரின் உடல் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement