வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு மக்கள் தெரியப்படுத்திய நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறினால் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையத்திற்கு முன்பாக மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட மக்கள் மீது பொய் குற்றங்களைப் பதிவு செய்வது, மக்களை மீது அத்துமீறித் தாக்குவது, மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக மக்களால் நாடாளுமன்ற நாடாளுமன்ற முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களோடு அடாவடித்தனமாகச் செயற்படும் ஒட்டுசுட்டான் பொலிஸ் உத்தியோகத்தர்; நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டம் ரவிகரன் எம்.பி. எச்சரிக்கை முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலயத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மக்களோடு அடாவடித்தனமாகச் செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு மக்கள் தெரியப்படுத்திய நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறினால் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையத்திற்கு முன்பாக மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது. குறித்த ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட மக்கள் மீது பொய் குற்றங்களைப் பதிவு செய்வது, மக்களை மீது அத்துமீறித் தாக்குவது, மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக மக்களால் நாடாளுமன்ற நாடாளுமன்ற முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.