• Aug 19 2026

ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி சிக்கினார்!

Chithra / Aug 18th 2026, 10:41 am
image


பல்லேகலை – தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த கைதி தனது ஆசனவாயில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றின் பேரிலேயே குறித்த நபர் ஏற்கனவே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிக்கு ‘ஐஸ்’ போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி சிக்கினார் பல்லேகலை – தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.குறித்த கைதி தனது ஆசனவாயில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றின் பேரிலேயே குறித்த நபர் ஏற்கனவே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிக்கு ‘ஐஸ்’ போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement