மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன் அமைந்துள்ள உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இரவு 11.00 மணிக்கு இடம் பெற்றதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
குறித்த உணவகத்தை வழமைபோல இரவு 9.00 மணிக்கு மூடியதுடன் அங்கு வேலை செய்துவரும் 7 இளைஞர்களும் உணவகத்தில் நித்திரைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் உணவகத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிவதை அங்கு நித்திரைக்குச் சென்ற ஒருவர் கண்ட நிலையில் அங்கு நித்திரையில் இருந்த 6 பேரையும் எழுப்பியதுடன் கடையின் கதவை உடைத்து கொண்டு வெளியேறியுள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து வெளியேறி 5 நிமிடத்தில் கடைத்தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.
இதனையடுத்து மாநகரசபையின் தீயணைப்பு படை மற்றும் பொலிசாரின் தீயணைப்பு பிரிவினர், காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படை இணைந்து நள்ளிரவு 12.30 மணிக்கு போராட்டத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் உணவவமும் அதனோடு இணைந்திருந்த கடையும் முற்றாக ஏரிந்து சாம்பலாகியுள்ளது
இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேவேளை சம்பவ இடத்துக்கு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், மாநகர சபை உறுப்பினர்களான மதன்,பிரதி, ஜனகன், தரண் ஆகியோர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈடுபட்டனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த உணவகம்; தெய்வாதீனமாக உயிர் தப்பிய பணியாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன் அமைந்துள்ள உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இச் சம்பவம் நேற்று இரவு 11.00 மணிக்கு இடம் பெற்றதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.குறித்த உணவகத்தை வழமைபோல இரவு 9.00 மணிக்கு மூடியதுடன் அங்கு வேலை செய்துவரும் 7 இளைஞர்களும் உணவகத்தில் நித்திரைக்கு சென்றுள்ளனர்.இந்த நிலையில் உணவகத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிவதை அங்கு நித்திரைக்குச் சென்ற ஒருவர் கண்ட நிலையில் அங்கு நித்திரையில் இருந்த 6 பேரையும் எழுப்பியதுடன் கடையின் கதவை உடைத்து கொண்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறி 5 நிமிடத்தில் கடைத்தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.இதனையடுத்து மாநகரசபையின் தீயணைப்பு படை மற்றும் பொலிசாரின் தீயணைப்பு பிரிவினர், காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படை இணைந்து நள்ளிரவு 12.30 மணிக்கு போராட்டத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் உணவவமும் அதனோடு இணைந்திருந்த கடையும் முற்றாக ஏரிந்து சாம்பலாகியுள்ளது இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அதேவேளை சம்பவ இடத்துக்கு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், மாநகர சபை உறுப்பினர்களான மதன்,பிரதி, ஜனகன், தரண் ஆகியோர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஈடுபட்டனர்.இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.